Paristamil Navigation Paristamil advert login

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் டிரம்ப் கருத்து

 மூன்றாம் உலகப்போர் தொடர்பில் டிரம்ப் கருத்து

21 மார்கழி 2023 வியாழன் 15:18 | பார்வைகள் : 3296


மூன்றாம் உலகப்போர் விரைவில் வெடிக்கவிருப்பதாகவும், அதைத் தடுக்க தன்னால் மட்டுமே முடியும் எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் எனக் கொலாராடோ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இந் நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரைத் தடுக்க முடியும் எனக் கூறியிருந்தார்.

தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைகளைக் குற்றம் சாட்டிய டிரம்ப், அணுசக்தி போர் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அதோடு 'டிரம்ப் பிரதமராக இருந்திருந்தால் உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் போரே நடந்திருக்காது' என ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.

'மேலும் மூன்றாம் உலகப்போர் வெறும் ராணுவங்களுக்கு இடையேயான சண்டையாக முடிந்துவிடாது, உலகையே அழித்துவிடும் எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்