Yvelines : ஆசிரியருக்கு உணவில் விஷம்! - மாணவன் கைது!!

21 மார்கழி 2023 வியாழன் 18:33 | பார்வைகள் : 5505
ஆசிரியர் ஒருவரது உணவில் சலவை தூளை கலந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Ecquevilly (Yvelines) நகரில் உள்ள Leonardo da Vinci பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் ஆசிரியர் ஒருவர் சலவை தூள் கலந்த தண்ணீரை பருகியுள்ளார். உடனடியாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சலவை தூள் கலந்த தண்ணீரை ஆசிரியருக்கு ஒரு மாணவன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு, குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் வழக்கு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.