கல்வி அமைச்சர் பதவி விலகல் - நிராகரித்த பிரதமர்!
21 மார்கழி 2023 வியாழன் 19:10 | பார்வைகள் : 3084
சுகாதார அமைச்சர் நேற்று புதன்கிழமை தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கையளித்த நிலையில், தற்போது உயர்கல்விக்கான அமைச்சர் Sylvie Retailleau தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்.
குடிவரவு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், மக்ரோனின் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், உயர்கல்விக்கான அமைச்சர் (ministre de l'Enseignement supérieur) தனது பதவி விலகல் கடித்ததை பிரதமர் Elisabeth Borne இடம் சமர்பித்ததாக அறிய முடிகிறது.
ஆனால் அதனை பிரதமர் நிராகத்ததோடு, தொடர்ந்து பணியாற்றுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில், உயர்கல்வி பாடசாலைகளில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. நேற்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது தொலைக்காட்சி நேர்காணலில் கூட இது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விமர்சனங்கள் காரணமாகவே அவர் பதவி விலக முற்பட்டதாக அறிய முடிகிறது.