Paristamil Navigation Paristamil advert login

ஜனவரி முதலாம் திகதி முதல் தந்தையர்களுக்கு பத்து வாரங்கள் விடுமுறை.

ஜனவரி முதலாம் திகதி முதல் தந்தையர்களுக்கு பத்து வாரங்கள் விடுமுறை.

21 மார்கழி 2023 வியாழன் 19:51 | பார்வைகள் : 5098


ஆண், பெண் சமத்துவத்தை அங்கிகரிக்கும் முகமாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது வரும் 2024 ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அன்றிலிருந்து தந்தையர்கள் விரும்பும் பட்சத்தில் குறித்த பத்து வாரங்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்தால் தாய்க்கு மட்டுமே அதிக நாட்கள் விடுமுறையும் தந்தைக்கு 28 நாட்கள் மட்டுமே விடுமுறை என்னும் சட்டம் நிலவிவரும் நிலையில், தந்தைக்கும் அதிக நாட்கள் விடுமுறை அதாவது பத்து வாரங்கள் எனும் புதிய சட்டத்தை Lyon நகரசபையின் நகரபிதா Grégory Doucet தலைமையிலான நகரசபை நிர்வாகம் வாக்களிப்பு மூலம் கொண்டு வந்துள்ளது.

குறித்த விடுமுறையை Lyon நகரில் வசிப்பவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். வருங்காலத்தில் இதனை பிரான்சின் ஏனைய நகரங்களும் கடைப்பிடிக்கலாம் என நகரபிதா Grégory Doucet தெரிவித்துள்ளார்.

"இது ஒரு உல்லாச விடுமுறை அல்ல மாறாக குழந்தை பிறந்ததும் அதன் வளர்ப்பில் தாய் மட்டுமே என்னும் நிலமையில்லாமல் தந்தையின் பங்களிப்பும் தேவை என்பதால் இந்த விடுமுறை" நகரபிதா Grégory Doucet மேலும் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்