Paristamil Navigation Paristamil advert login

சீனா நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து! 12 பேர் பலி!

சீனா நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து! 12 பேர் பலி!

22 மார்கழி 2023 வெள்ளி 04:01 | பார்வைகள் : 5087


சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்துள்ளனர்.

ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.

இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 13 போ் காயமடைந்தனா்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழைப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது.

சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டில் சுரங்கப் பாதுகாப்பு விதிமுறைகளின் அமுலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. 

அதிலிருந்து சுரங்க விபத்து உயிரிழப்புகள் குறைந்தாலும், அத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்