Paristamil Navigation Paristamil advert login

தொடர் ‘நம்பிக்கை இல்லா பிரேரணை’களுக்கு மத்தியில் - 2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றம்!!

தொடர் ‘நம்பிக்கை இல்லா பிரேரணை’களுக்கு மத்தியில் - 2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றம்!!

22 மார்கழி 2023 வெள்ளி 05:57 | பார்வைகள் : 2665


பகுதி பகுதியாக ஆராயப்பட்ட 2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட அறிக்கை முழுமையாக நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.


பிரதமர் Elisabeth Borne இந்த வரவுசெலவு திட்டத்தினை நிறைவேற்ற தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியிருந்தார். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சட்டம் ஒன்றை நிலைவேற்ற இந்த 49.3 அரசியலமைப்பு அனுமதிக்கிறது.


பிரதமர் 49.3ஐ பயன்படுத்துவதை கண்டிக்கும் எதிர்கட்சி உறுப்பினர்கள், மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை ( motion de censure) பல தடவைகள் கொண்டுவந்திருந்தது. வாக்கெடுக்கப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.

நேற்று இறுதியாக மீண்டும் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு, பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டது. 289 ஆதரவு வாக்குகள் தேவை எனும் நிலையில், 116 வாக்குகள் மட்டுமே பதிவானது.

அதையடுத்து 2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் Elisabeth Borne இதுவரை 23 தடவைகள் இந்த 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்