Paristamil Navigation Paristamil advert login

Christmas Cakeக்கு 3 ஆண்டுகால தடை விதித்த நாடு

 Christmas Cakeக்கு 3 ஆண்டுகால தடை விதித்த நாடு

22 மார்கழி 2023 வெள்ளி 09:01 | பார்வைகள் : 3397


மலேசியாவில் Merry Christmas Cakeகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில், கேக் போன்ற பேக்கரி பொருட்களில் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்து எழுத தடை விதிக்கப்பட்டது.

பேக்கரிகள் இந்த விதியை மீறினால், அவர்களின் ஹலால் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டது. 

ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக மலேசியாவில், கேக் அல்லது வேறு எந்த பேக்கரி பொருட்களிலும் முஸ்லிம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை எழுத முடியாது. பேக்கரிகள் தங்கள் கடைகளில் கூட இதுபோன்ற கேக்குகளை காட்சிக்கு வைக்க முடியாது.

ஆனால் தற்போது மலேசியா இஸ்லாத்தில் 'ஹராம்' இல்லை என்று கூறுவதால், இஸ்லாம் அல்லாத பண்டிகைகளின் போது மக்கள் கேக்கில் வாழ்த்துக்களை எழுதலாம்.

மலேசியா 2020-ஆம் ஆண்டில் ஒரு உத்தரவை வெளியிட்டது, அதன்படி ஹலால் சான்றிதழைக் கொண்ட பேக்கரிகள் இஸ்லாம் அல்லாத பண்டிகைகளுக்கான வாழ்த்துக்களை கேக் அல்லது பேக்கரி பொருட்களில் எழுதி விற்க முடியாது.

மலேசியாவின் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM) இந்த விதியை ரத்து செய்துள்ளது. ஹலால் சான்றிதழைக் கொண்ட பேக்கரி விற்பனை நிலையங்கள், இஸ்லாம் அல்லாத எந்தப் பண்டிகையின் வாழ்த்துக்களையும் கேக் அல்லது அதுபோன்ற பேக்கரிப் பொருட்களில் எழுதுவதில் எந்தத் தடையும் இல்லை என்று JAKIM கூறியது.

திங்கள்கிழமை JAKIM ன் அறிக்கையைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள பேக்கரிகளில் 'Merry Christmas' என்று எழுதப்பட்ட கேக்குகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்