Paristamil Navigation Paristamil advert login

கொக்கெய்னை சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து ஆராயும் சுவிட்சர்லாந்து

கொக்கெய்னை  சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து ஆராயும் சுவிட்சர்லாந்து

22 மார்கழி 2023 வெள்ளி 09:06 | பார்வைகள் : 3102


சுவிட்சர்லாந்தில்  கொக்கெய்னை  சட்டப்பூா்வமாக அனுமதிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

சுவிட்சர்லாந்து தலைநகா் பெர்னில் கொக்கெய்ன் போதைப் பொருளை சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து சுவிஸ் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக கொக்கெய்னை  சட்டப்பூா்வமாக அனுமதிப்பது குறித்து ஆராயும் நாடாக சுவிட்சர்லாந்து மாறியுள்ளது.

தலைநகர் பொ்னில்நகரில் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை.

கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுகிறது.

எனவே, கொக்கெய்னை சட்டபூா்வ கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகரித்தால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சந்தையைக் கண்காணிக்கவும் முடியும் என்று நிபுணா்கள் கூறி வருகின்றனா்.

அதையடுத்து, சோதனை முறையில் கொக்கெய்னை சட்டபூா்வமாக்குவதற்கு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.

எனினும், அதனை செயல்படுத்த பொ்ன் மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுடன் அத்துடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்