Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

இலங்கையில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

22 மார்கழி 2023 வெள்ளி 14:56 | பார்வைகள் : 4366


இலங்கையில் அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக இந்த நீண்ட பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,298 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்