மாலி, பர்கினா ஃபஸோ நாடுகளைத் தொடர்ந்து, நைகரில் இருந்தும் வெளியேறும் பிரெஞ்சு இராணுவம்!!
22 மார்கழி 2023 வெள்ளி 17:29 | பார்வைகள் : 3640
ஆபிரிக்க நாடுகளான மாலி (Mali), பர்கினா ஃபஸோ (Burkina Faso) ஆகியவற்றில் இருந்த பிரெஞ்சு இராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது மற்றுமொரு ஆபிரிக்க நாடான நைகரில் (Niger) இருந்தும் பிரெஞ்சு இராணுவம் வெளியேற உள்ளது.
இரு மாதங்களுக்கு முன்னர் நகரில் இராணுவ சதி ஏற்பட்டு ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடந்த செப்டம்பரில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டிசம்பர் 22, இன்று வெள்ளிக்கிழமை முதலாம் கட்ட வெளியேற்றம் ஆரம்பித்தது. அங்கு மொத்தமாக 1,500 பிரெஞ்சு இராணுவத்தினர் உள்ளனர். பகுதி பகுதியாக இவ்வருட இறுதிக்குள் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.