குடிவரவு சீர்திருத்தத்தைக் கண்டித்து மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ள தொழிற்சங்கம்!!
22 மார்கழி 2023 வெள்ளி 17:43 | பார்வைகள் : 5955
குடியேற்றவாதிகள் மீது இன்றுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட குடிவரவு சீர்திருத்தத்தை (Loi immigration) கண்டித்து, CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. ஜனவரி 14 அல்லது 21 போன்ற ஞாயிற்றுக்கிழமை நாள் ஒன்றில் தலைநகர் பரிஸ் மற்றும் நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனவரி 11 ஆம் திகதி தொழிற்சங்கங்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ள திகதி உறுதிசெய்யப்படும் என அறிய முடிகிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை குடிவரவு சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.