Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 600 ரூபாவை தாண்டிய வெங்காய விலை 

இலங்கையில் 600 ரூபாவை தாண்டிய வெங்காய விலை 

23 மார்கழி 2023 சனி 02:58 | பார்வைகள் : 1656


நாட்டு மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்த வேண்டும் என தேசிய மகளிர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெங்காயம் மாபியாவை முறியடிக்க முடியும் என அதன் தலைவி ஹஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை சந்தையில் பெருமளவு அதிகரித்துடன் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 600 ரூபாவாக உள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிக தேவை இருப்பதால், இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்ளூரில் வெங்காயம் தட்டுப்பாட்டின் பின்னணியில் மாபியா இருப்பதால், ஒரு மாதம் வெங்காயத்தை உட்கொள்வதை நிறுத்தினால், இந்த மாபியாவை முறியடிக்க முடியும் என ஹஷினி சில்வா கூறியுள்ளார்.

வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் ஏன் நிர்ணயிக்க முடியாது என ஹஷினி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாதம் வெங்காயம் சாப்பிடாமல் நிறுத்தினால் வெங்காயம் மாபியாவிற்கு என்ன நடக்கும் என்று பார்க்க முடியும்.

இறக்குமதியாளர்களுக்கும் அரசாங்க அமைச்சர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் காரணமாக வெங்காயத்திற்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்