இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!
23 மார்கழி 2023 சனி 08:32 | பார்வைகள் : 5305
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனை தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் நாட்களில் பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan