Paristamil Navigation Paristamil advert login

காதலியை திருமணம் முடித்த CSK அணியின் இளம் கிரிக்கெட் வீரர்

காதலியை திருமணம் முடித்த CSK அணியின் இளம் கிரிக்கெட் வீரர்

23 மார்கழி 2023 சனி 08:36 | பார்வைகள் : 1243


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துஷார் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (CSK) ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு திருமணம் முடிவடைந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் முடிந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் போது பலரது கவனத்தையும் ஈர்த்தவர் துஷார் தேஷ்பாண்டே. சிஎஸ்கே அணியின் இளம் வீரரான இவர், சென்னை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

துஷார் தேஷ்பாண்டேவின் பள்ளி தோழி நபா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜுன் 13 -ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்களும் சிஎஸ்கே அணி வீரர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்த துஷார் தேஷ்பாண்டே, "ஒரு புதிய தொடக்கத்திற்காக இதயங்களை இடமாற்றிக் கொண்டோம்" என பதிவிட்டுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்