Paristamil Navigation Paristamil advert login

பிணைக் கைதிகள் எப்போது விடுவிப்பு! ஹமாஸ் தலைவர்

 பிணைக் கைதிகள் எப்போது விடுவிப்பு!  ஹமாஸ் தலைவர்

23 மார்கழி 2023 சனி 08:56 | பார்வைகள் : 3714


இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் ஒக்டோபர் 7ம் திகதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இதுவரை 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 

அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட புதிய விவாதத்தின் போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் படையினர சரணடையலாம் அல்லது உயிரிழக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள பிணைக் கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவார் என்பதை ஹமாஸ் தலைவர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், ஹமாஸ் தலைவர் போர் நிறுத்தம் மற்றும் எல்லாருக்கும் எல்லாம் சென்ற சூத்திரம் சாத்தியமான பிறகு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு போர் நிறுத்தத்திற்கு மாற்றாக ஒரு வாரத்தில் 40 பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் ஒப்பந்தத்தை ஹமாஸ் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்