ஜேர்மனியின் இரட்டை பிரஜா உரிமை சட்டம் தொடர்பில் வெளியாகிய தகவல்
23 மார்கழி 2023 சனி 09:50 | பார்வைகள் : 3468
ஜேர்மனியின் இரட்டை பிரஜா உரிமை சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டைக்குடியுரிமை தொடர்பில், ஜேர்மனியில் ஆளும் கூட்டணிக்கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்தன.
இந்நிலையில், புலம்பெயர்தல் சட்டங்கள் தொடர்பில் தங்களுக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகளை அக்கட்சிகள் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் ஜனவரியில் கூடும்போது, இரட்டைக்குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கூறுகிறார்கள்.