Paristamil Navigation Paristamil advert login

புதிதாக பரவி வரும் கொவிட் தொற்றால் நிபுணர்கள் அச்சம்

 புதிதாக பரவி வரும் கொவிட் தொற்றால் நிபுணர்கள் அச்சம்

23 மார்கழி 2023 சனி 09:55 | பார்வைகள் : 2954


புதிதாக பரவும் JN.1 என்ற கொவிட் திரிபு மக்களின் வயிற்றுப்பகுதியை பாதிப்பதாக நிபுணர்கள் ஆராய்ந்துள்ளார்கள்.

பொதுவாக சுவாச அமைப்பை சிதைக்கும் கொவிட் தொற்று தற்போது மாற்றம் கண்டு வயிற்றை பாதிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீரில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது JN.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகளில் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறியுள்ளதையும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

மிசோரி பல்கலைக்கழகத்தின் மார்க் ஜான்சன் என்ற நிபுணர் தெரிவிக்கையில், 

ஐரோப்பாவில் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் பாதிப்பின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாகவும், நிபுணர்கள் தரப்பில் பலர் சாத்தியமான விளக்கங்கள் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் JN.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது இதற்கு வேறு ஏதும் விளக்கம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், JN.1 தொற்றானது வயிற்றை பதம் பார்க்கிறது என மார்க் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், 100,000 மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இருந்து இது உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுவரை வயிறு தொடர்பான உபாதைகளுடன் எவரும் மருத்துவமனையை நாடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்