Paristamil Navigation Paristamil advert login

அட்லியின் விஜய்-ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?

அட்லியின் விஜய்-ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?

23 மார்கழி 2023 சனி 14:29 | பார்வைகள் : 1776


அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் படம் என்னாச்சு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் விஜய் படங்களை இயக்கினார். இதனை அடுத்து சமீபத்தில் அவர் இயக்கிய ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைத்து இயக்க வேண்டும் என்று அட்லி விருப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கும் படத்தில் இணைவார் என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்