கமல் ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படம் கைவிடப்படுகிறதா?

23 மார்கழி 2023 சனி 14:34 | பார்வைகள் : 6337
ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் ஹாசனின் 233-வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த ’தலைவன் இருக்கின்றான்’ திரைப்படம் மீண்டும் ஊசலாட்டத்தில் சிக்கி இருக்கிறது.
’தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பில் திரைப்படம் காணும் யோசனை கமல் ஹாசனிடம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. தேர்தலில் குதிப்பது என்ற முடிவெடுத்தபோது இந்த படத்தலைப்பு கமலுக்குப் பிடித்துப்போனது. 2017-ல் இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் இடையில் சுணங்கி, 2019ல் முழு வேகமெடுத்தன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பது குறித்து பிரத்யேக அறிவிப்பு வெளியானது. பாலிவுட் நட்சத்திரங்களில் சயீஃப் அலிகான் முடிவானதுடன், அமீர் கானுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. வடிவேலு திரைப்பயணத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கப்போவதாகவும் இன்னொரு சேதி வலம் வந்தது. கமல் ஹாசனுடன் ஹெச்.வினோத் கைகோக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ பிரம்மாண்ட அரசியல் த்ரில்லராக திட்டமிடப்பட்டது .
ஆனால், கொரோனா பின்னணியில் முடங்கிய திரைப்படங்களில் ’தலைவன் இருக்கின்றான்’-உம் ஒன்றாக மாறியது. பின்னர் ’விக்ரம்’ திரைப்படத்தை அடுத்து ’தலைவன் இருக்கின்றான்’ மீண்டும் தலையெடுத்தது. புதிய மாற்றங்களுடன் ஹெச்.வினோத் முன்வைத்த கதையும் கமலுக்கு பிடித்துப்போனது. விக்ரம் வெற்றிக்கு இணையாக இன்னொரு படம் கொடுக்கும் கமலின் ஆர்வமும் திருப்தி கண்டது.
தற்போது கமல் ஹாசன் - மணிரத்னம் இணையும் கமலின் 234 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான சூட்டில், முன்னதாக KH233 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இதற்கிடையே ’தலைவன் இருக்கின்றான்’ என்ற தலைப்பில் கமலுக்கு ஏனோ விருப்பம் இல்லாது போனது. இதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தமிழ் சினிமா மட்டுமன்றி தேசிய அளவில் ’தலைவா’ என்று ரஜினி காந்தின் அடையாளம் வலுவாக பதிந்திருக்கிறது. கமலுக்கும் தனிப்பட்ட அரசியல் கணக்குகள் பிசகியதில், முதல்வர் கனவை மூட்டைகட்டி வைத்ததோடு, இப்போதை திமுக கூட்டணியில் எம்பியாகி நாடாளுமன்றம் சென்றால் போதும் என்றளவுக்கு இறங்கியிருக்கிறார். எனவே, ’தலைவன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து, ரசிகர்களின் ஆர்வக்கோளாறு புதிய பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதில் ஆண்டவருக்கு விருப்பமில்லை என்று சொல்லப்பட்டது.
இவற்றுக்கு அப்பால் தலைப்பு மட்டுமன்றி ஹெச்.வினோத் உடனான கமலின் கூட்டணியே ரத்தாவதாகவும் இன்னொரு தகவல் வட்டமடிக்கிறது. ஹெச்.வினோத்துக்கு பதிலாக கேஜிஎஃப், சாலார் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், கமலின் 233வது படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஹெச்.வினோத்தும் கார்த்தியை வைத்து ’தீரன் அதிகாரம்’ அடுத்த பாகத்துக்கு தாவப்போவதாக சொல்லப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1