அரியவகை பொருட்களுடன் - பாடகர் Johnny Hallyday இற்கு கண்காட்சிக் கூடம்!!
23 மார்கழி 2023 சனி 16:37 | பார்வைகள் : 4583
மறைந்த பாடகர் Johnny Hallyday இன் நினைவாக அவர் தனது வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு கண்காட்சிக் கூடம் ஒன்று 'Paris Expo’ (Porte de Versailles) அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு 3,000 சதுர மீற்றர் பரப்பளவில் கிட்டார் (guitar) இசைக்கருவி வடிவில் இந்த கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பாடகர் Johnny Hallyday பயன்படுத்திய அரிய பொருட்களை அங்கு பார்வையிடலாம். குறிப்பாக அவருக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அவர் பயன்படுத்திய Harley-Davidson மோட்டார் சைக்கிள் இரண்டு அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Cobra மகிழுந்து அத்துடன் அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ் பயணமாகியிருந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் (பொது வெளியில் பகிரப்படாத புகைப்படங்கள்) போன்றனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.