பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் கொள்ளை! - Pantin நகரில் ஒருவர் கைது!!

23 மார்கழி 2023 சனி 16:48 | பார்வைகள் : 11041
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு வசித்த இருவரைக் கட்டிவைத்துவிட்டு, €200,000 மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இச்சம்பவம் Avenue des Chalets பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. முதியவர்கள் இருவரையும் கட்டி வைத்த கொள்ளையர்கள். பணம், நகைகள் என மொத்தமாக €200,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையடுத்து, சிலமணிநேரம் கழித்து கொள்ளையர்களில் ஒருவரை Pantin (Seine-Saint-Denis) நகரில் வைத்து கைது செய்தனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1