ஆஹா.. அக்காவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் யாருய்யா.. வைரலாகும் "பொண்டாட்டி கணக்கு"!
23 மார்கழி 2023 சனி 18:34 | பார்வைகள் : 6086
கணவன் தன்மனைவியிடம் ஒருமுறை 250 கடன் வாங்கினான்.
சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான்
சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாள்.
மனைவியிடம்.. நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான் கணவன்.
மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... அதெப்படி என்று மண்டை குழம்பிப் போனான் கணவன். திரும்பத் திரும்பக் கேட்டும் அதே தொகையேயே சொன்னார் மனைவி.
எங்கே கணக்கு சொல்லு என்று கணவன் திரும்பத் திரும்பக் கேட்டதால் மனைவி கொடுத்த கணக்கு இதுதான்:
Rs. 2 5 0
Rs. 2 5 0
------------------
Rs. 4 10 0

























Bons Plans
Annuaire
Scan