Paristamil Navigation Paristamil advert login

விமானமூடாக ஆட்கடத்தல்! - இந்தியர்களை ஏற்றி வந்த விமானத்தில் சோதனை நடவடிக்கை! - இருவர் விசாரணைகளின் கீழ்!!

விமானமூடாக ஆட்கடத்தல்! - இந்தியர்களை ஏற்றி வந்த விமானத்தில் சோதனை நடவடிக்கை! - இருவர் விசாரணைகளின் கீழ்!!

24 மார்கழி 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4524


டுபாயில் இருந்து பிரான்சின் Châlons-Vatry (Marne) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றில் ஆட்கடத்தல் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் சோதனையிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழாஇ மாலை இந்த ருமேனியாவுக்குச் சொந்தமான LEGEND Airlines நிறுவனத்தின் குறித்த விமானம், டுபாயில் இருந்து புறப்பட்டது. அதில் ஏற்பட்ட சிறிய பழுது காரணமாக குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சில மணிநேரங்களில் அது அங்கிருந்து மத்திய அமெரிக்க நாடான Nicaragua  நோக்கி புறப்பட இருந்தது. 

அந்த சந்தர்ப்பத்திலேயே விமானம் ஊடாக ஆட்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதிகாரிகள் விமானத்தை முற்றுகையிட்டனர்.

அதில்  குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட 303 இந்திய பயணிகள் அதில் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டனர். பயணிகளில் பலருக்கு பயண நோக்கம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் பிரான்சில் தஞ்சமடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

விமான குழுவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, ஆட்கடத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்