Seine-Saint-Denis : திருடப்பட்ட மகிழுந்தினை செலுத்திய பெண் கைது!

24 மார்கழி 2023 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 14708
திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மகிழுந்து ஒன்றைச் செலுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதின் போது அவர் காவல்துறை வீரர் ஒருவரை மோதித்தள்ளியதாக அறிய முடிகிறது.
Les Lilas (Seine-Saint-Denis) நகரினை ஊடறுக்கும் A104 வீதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வீதியில் SUV ரக மகிழுந்து ஒன்று வருவதை அவதானித்தனர். குறித்த மகிழுந்து திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
மகிழுந்து காவல்துறையினர்களில் ஒருவரை இடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று A3 நெடுஞ்சாலையில் ஏறி மின்னலாக மறைந்தது.
குறித்த மகிழுந்தை காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.
தப்பிச் சென்ற மகிழுந்து வீதியில் பயணித்த சிறிய மகிழுந்து ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் Villepinte முனையில் வைத்து அப்பெண்ணைக் கைது செய்தனர்.
அவர் செலுத்திய மகிழுந்து திருடப்பட்டது என தெரிவிக்கப்பட்டதுடன், அவருக்கு ஓட்டுனர் உரிமமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1