Paristamil Navigation Paristamil advert login

2023ல் அதிகம் Delete செய்யப்பட Apps.. முதலிடத்தில் Metaவின் செயலி

2023ல் அதிகம் Delete செய்யப்பட Apps.. முதலிடத்தில் Metaவின் செயலி

24 மார்கழி 2023 ஞாயிறு 04:09 | பார்வைகள் : 1769


2023-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகமான பயனர்கள் Instagram Appஐ Delete செய்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் உலகளவில் 4.8 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளன.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான TRG Datacentresன் தரவுகளின்படி, பயனர்கள் சராசரியாக இரண்டரை மணிநேரம் இதில் செலவிடுகின்றனர்.

ஐந்து நாட்களில் 100 மில்லியன் பயனர்களைத் தாக்கிய Meta தளமான Threads, தினசரி பயனர்களில் 80 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது.

Instagram தான் அதிகம் நீக்கப்பட்ட App. ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை எப்படி நீக்குவது என்று தேடுகிறார்கள்.

டிஆர்ஜி டேட்டாசென்டர்ஸ் தலைவர் Chris Hinkle, இன்ஸ்டாகிராமை நீக்கும் ஆர்வம் சமூக ஊடகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம் என்று கூறுகிறார்.

உலகில் மிகவும் பிரபலமான மற்றும் பல நாடுகளில் கிடைக்கக்கூடிய ஒன்பது சமூக ஊடக தளங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். 

ஒவ்வொரு செயலியின் பயனர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

இன்ஸ்டாகிராம் செயலியை டெலிட் செய்ய 10.2 லட்சம் பேர் தேடியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல், SnapChat (1.28 லட்சம்), X 12.3 லட்சம்), Telegram (71,700), Facebook (49,000), TikTok (24,900), YouTube (12,500), Whatsapp (4,950) மற்றும் WeChat (2,090) ஆகிய செயலிகளை அதிகமாக delete செய்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்