Paristamil Navigation Paristamil advert login

போரின் தீவிரம்.... 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

 போரின் தீவிரம்.... 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

24 மார்கழி 2023 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 7656


இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான சண்டை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் போராளி குழுவை முழுவதுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலை முன்னகர்த்தி வருகிறது.

இதில் டஜன் கணக்கான ஹமாஸ் போராளி குழுவினர் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்களை ஆங்காங்கே தாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் காசாவில் தற்போது 8 இஸ்ரேலிய வீரர்கள் ஹமாஸ் படையினர் உடனான சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைப்படி இதுவரை  154 இஸ்ரேலிய வீரர்கள் ஒக்டோபர் 20 ஆம் திகதி தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய பிறகு கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருந்து இதுவரை 480 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்