காசாவில் இஸ்ரேல் நோக்கம் தோல்வியடையும் ஹமாஸ் எச்சரிக்கை
24 மார்கழி 2023 ஞாயிறு 09:51 | பார்வைகள் : 2923
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை பெண்கள் குழந்தைகள் என குறைந்தபட்சமாக 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்து கெட்டி, பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் படையினரை அழிக்கும் இஸ்ரேலிய ராணுவத்தின் நோக்கம் தோல்வியில் நிறைவடையும் என ஹமாஸ் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர், அபு உபைதா அறிவித்துள்ளார்.
அத்துடன் காசாவில் போர் தாக்குதலை நிறுத்தாமல் பிணைக் கைதிகள் விடுவிப்பு என்பது சாத்தியமற்றது எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு மற்றும் தொடர் தாக்குதல்கள் பிணைக் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வராது.
பேச்சுவார்த்தைகள் மட்டுமே பிணைக் கைதிகளை உயிருடன் கொண்டு வருவதற்கான ஒரே வழி எனவும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய தகவல் படி, தற்போது ஹமாஸ் படையினரின் பிடியில் 129 பிணைக் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.