2023 இல் நடக்கப்போவதை துல்லியமாக கணித்த வங்கா பாபா...
24 மார்கழி 2023 ஞாயிறு 10:03 | பார்வைகள் : 3475
பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய வங்கா பாபாவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடித்தனர் அவரது குடும்பத்தினர்.
அவர் தன் கண் பார்வையை இழந்திருந்தார்.
அதற்குப் பின், அதாவது, தனது கண் பார்வையை இழந்த பிறகு, எதிர்காலம் குறித்து கணிக்கத் துவங்கிய பாபா, தான் காணாமல் போனபோது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
2023ஆம் ஆண்டில், பூமியின் வட்டப்பாதையில் மாற்றம், அணு உலை வெடிப்புகள் போன்ற சில விடயங்களை கணித்திருந்த பாபா, சில அறிவியல் பூர்வ கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும் கூறியிருந்தார்.
அவற்றில் ஒன்று, ஆய்வகங்களில் குழந்தைகள் உருவாக்கப்படுதல் குறித்ததாகும். எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளின் தோலின் நிறம் முதலான சில குணாதிசயங்களை பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யமுடியும் என்று கணித்திருந்தார் அவர்.
ஆனால், பாபாவின் இந்த கணிப்புகள் நிறைவேறவில்லை.
2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், Hashem Al-Ghaili என்னும் பயோடெக்னாலஜி துறையைச் சார்ந்த அறிவியலாளர், 8 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், ஆண்டொன்றிற்கு 30,000 குழந்தைகள் வளர்க்கப்படும் ஆய்வகம் ஒன்றைக் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த திட்டத்தின் பெயர் Ectolife என்பதாகும்.
அத்திட்டத்தின்படி, பெற்றோர் தங்கள் குழந்தையின் தோலின் நிறம் முதலான குணாதிசயங்களில் சிலவற்றில் மாற்றம் செய்யலாம்.
குறிப்பாக, பிடித்தமானவற்றை சேர்த்து, விரும்பத்தகாதவற்றை நீக்கிவிடலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி ஒரு விடயம் இதுவரை சாத்தியமாகவில்லை.
பாபா கணித்திருந்த இன்னொரு விடயம், 2023இல் அணு உலை வெடிப்பு ஒன்று நிகழும் என்பதாகும்.
அந்த அணு உலை வெடிப்பின் காரணமாக, ஆசியா முழுவதும் வானத்தில் நச்சு மேகங்கள் காணப்படும் என்றும் அவர் கணித்திருந்தார்.
2023ஆம் ஆண்டு முடிவடைய இன்னமும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், இதுவரை அப்படி ஒரு விடயமும் நடக்கவில்லை.