Paristamil Navigation Paristamil advert login

மிகவும் வெப்பமான ஆண்டு 2023! ஐ.நா தகவல்

 மிகவும் வெப்பமான ஆண்டு 2023! ஐ.நா தகவல்

24 மார்கழி 2023 ஞாயிறு 10:22 | பார்வைகள் : 4005


உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளது.

 ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO - World Metorological Organisation) இதனை  தெரிவித்துள்ளது.

ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு உடனடியாக உரிய நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்ற கணிப்பு கவனம் செலுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருப்பதற்கு 99 சதவீத வாய்ப்புள்ளதாக இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளதால் சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டு, அந்த ஒப்பந்தமானது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன.

இந்நிலையில் உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸை விட உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது.

ஆனால், ஒக்டோபர் 2023இன் முடிவடைந்த காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணித்துள்ளது.

கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட “பேர்க்லி ஏர்த்’ அமைப்பு (Berkeley Earth) இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.

எல் நினோ ஆண்டில் கடல் மேற்பரப்பு வெப்பமாகுவது இடம்பெறும் என்றாலும் இந்த ஆண்டு வெப்பமடைதல் ஆச்சரியமளிக்கும் வகையில் நடந்துள்ளது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சராசரி ஆண்டு வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என 1850-1900 சராசரியைவிட அதிகரிக்கும் என கணிப்பிடுகின்றோம் எனவும் இதற்கான வாய்ப்பு 99 சதவீதம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்