Paristamil Navigation Paristamil advert login

பொய் சொல்வது திமுகவுக்கு கைவந்த கலை : ஆதாரத்துடன் விளக்கினார் அண்ணாமலை

பொய் சொல்வது திமுகவுக்கு கைவந்த கலை : ஆதாரத்துடன் விளக்கினார் அண்ணாமலை

24 மார்கழி 2023 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 2014


பொய் சொல்வது திமுகவுக்கு கைவந்த கலை என  தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுப்பதாகவும், குறைவாக கொடுப்பதாகவும் திமுக கூறி வருகிறது. அப்படி மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை. 

எந்த மாநிலமாக இருந்தாலும் சேதத்தின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. பா.ஜ., ஆட்சி  நடக்கும்  குஜராத்தில் 2021ல் ஏற்பட்ட புயல் பாதிப்பிற்கு ரூ. 9 ஆயிரத்து 836 கோடி கேட்டார்கள் .  

மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி கொடுத்தார்கள்.  அதன் பிறகு மிச்சம் ரூ 8 ஆயிரத்து 836 கோடி கொடுக்கவில்லை. 

கோவிட் காலக்கட்டத்தில் குஜராத்திற்கு மொத்தமாக ரூ. 304 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு ரூ. 868 கோடி வழங்கப்பட்டது. இதே மாதிரி உதாரணங்கள் ,புள்ளிவிவரங்கள் சொல்லி கொண்டே போகலாம்.  

திமுகவுக்கு பொய் சொல்வது கைவந்த கலை. பொய் சொல்வதே அவர்களின் வாடிக்கை. திமுகவின் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை.

மோதல் போக்கு

நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் உதயநிதி மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறார். மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக்குழு உடனடியாக வந்தது. மத்தியக்குழு ஆய்வு செய்த பின்னரே தென் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்தார். 

நாளை மறுநாள் டிச.,26ம் தேதி தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிறார். வெள்ளப்பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிதி விரைவில் வரும் என நம்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்