Paristamil Navigation Paristamil advert login

திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரிப்பு: ஜி.கே.வாசன்

திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரிப்பு: ஜி.கே.வாசன்

24 மார்கழி 2023 ஞாயிறு 11:46 | பார்வைகள் : 1745


திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என நிருபர்கள் சந்திப்பில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இது குறித்து ஜி.கே.வாசன் கூறியதாவது: கூட்டணி குறித்து எல்லா கட்சிகளும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு தான் அறிவிக்கும். கூட்டணி குறித்து கட்சிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போது தான் அது உண்மை நிலையாக இருக்க முடியும். 

அனைத்து எதிர்க்கட்சிகளுடன் நன்றாக பழகி கொண்டு இருக்கிறோம். தற்போது கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் வியூகத்திற்காக கட்சியை வலுப்படுத்துவது அவசியம். த.மா.கா., இருக்கும் கூட்டணி முக்கியமானதாக இருக்கும். திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. 

அதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அந்த வியூகத்தை முழுமையாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் வெற்றிப் பெறக்கூடிய நிலை ஏற்படும்.  

அதிமுக, பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் நட்பாக இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

குறை கூறாதீர்

வானிலை ஆய்வு மையத்தை குறை கூறுவதை நிறுத்திவிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு சுணக்கம் இல்லாமல் முறையாக வழங்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்