இறப்பை கணிக்கும் AI தொழில்நுட்பம் - விஞ்ஞானிகளின் அதிரடி தகவல்..!
25 மார்கழி 2023 திங்கள் 02:02 | பார்வைகள் : 2158
AI தொழில்நுட்பம் ஒருவரின் மரணத்தை கணிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது வேகமாக முன்னேறி வருகிறது. இது பல துறைகளில் இருக்கும் மனிதர்களுக்கு உதவியாக இருகிறது.
உதாரணமாக கூற வேண்டுமென்றால், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் AI உதவி செய்து வருகிறது.
இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது மற்றுமொரு ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் மரணத்தைக் கூட கணிக்க முடியுமாம். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுப்பிடிப்பை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த AI இறப்பு கால்குலேட்டரின் பெயர் Life2vec. இந்த ஆராய்ச்சியை அவர்கள் “மனித வாழ்க்கையை கணிக்க அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளின் வரிசையைப் பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் செய்துள்ளனர்.
மற்றைய AI தொழில்நுட்பங்களை போல் இல்லாமல் 78 சதவிகிதம் துல்லியமாக மரணத்தை கணிக்கிறது.
இது ஒருவரின் மரணத்தை கணிப்பதற்கு வாழ்வின் முக்கிய மூலக்கூறுகளையும் அடிப்படையாக வைத்தே கணிக்கிறது.
அதாவது வருமானம், தொழில், குடியிருப்பு மற்றும் உடற்ரீதியான பிரச்னைகள் முதலான விடயங்களை வைத்து மரணத்தை கணிக்கிறது.
மேலும் இதை பயன்படுத்தி ஆரம்ப கட்டத்திலேயே நோய்களைக் கண்டறிய முடியும்.
ஆகவே நோய்களை உடனே குணப்படுத்தி விடலாம் எனவும் எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் மக்களையும் காப்பாற்ற முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.