கிறிஸ்துமஸ் நாளில் கொடூர தாக்குதலை நடத்திய இஸ்ரேல்...
25 மார்கழி 2023 திங்கள் 02:17 | பார்வைகள் : 3751
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்களுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் காசாவின் அடர்ந்த குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் அல்-மகாசி (Al-Maghazi) புலம்பெர்ந்தோர் முகாமில் உள்ள பல குடியிருப்பு வீடுகள், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டன.
இதில் சுமார் 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
Al-Maghazi மக்கள்தொகை மிகவும் அடர்த்தியான பகுதியாகும். இந்த தாக்குதல் காரணமாக, தற்போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய பகுதிகளுக்கு நகர்கின்றன.
கொல்லப்பட்ட 70 பேரில் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக PRCS தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ் நாளில் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காசா அதிகாரிகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.