செம்பருத்தி தேநீர் அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா..?
25 மார்கழி 2023 திங்கள் 11:33 | பார்வைகள் : 2096
செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையானபொருட்கள்:
செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,
தண்ணீர் 1 கப் – 150 மி.லி,
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.
ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.
மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.
சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.
கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.