Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் டோநட்

சிக்கன் டோநட்

25 மார்கழி 2023 திங்கள் 11:38 | பார்வைகள் : 2337


இப்பொழுது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். இந்த கோழிக்கறியில் எதை சமைத்துக் கொடுத்தாலும் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் மசாலா, சிக்கன் சில்லி, சிக்கன் பெப்பர், சிக்கன் ஃப்ரை. சிக்கன் 65 என்று பலவகை உணவுகளை கோழிக்கறியில் சமைக்கின்றோம். அதேபோல் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன் வகைகளை தான். இவ்வாறு அனைவருக்கும் பிடித்த கோழிக்கறியை வெளியில் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே இவற்றை விருப்பமாக வீட்டிலேயும் சமைத்து சாப்பிடலாம். வித்தியாசமான முறையில் சிக்கனை கொண்டு சிக்கன் டோநட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

சிக்கன் 200

வெங்காயம்- 1

பச்சைமிளாகாய்- 1

இஞ்சி- ஒரு துண்டு

பூண்டு- 5 பல்

மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

கரம்மசாலா தூள்- கால் டீஸ்பூன்

மிளகுதூள்- கால் டீஸ்பூன்

கொத்தமல்லி தழை

பிரெட்- 2 துண்டு

முட்டை- இ

மைதா- ஒரு ஸ்பூன்

பிரெட் தூள்- ஒரு கப்

செய்முறை

ஒரு மிக்சி ஜாரில் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகள், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகாய்தூள், கரம்மசாலா தூள், மிளகுதூள், பிரெட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு ஸ்பூன் மைதா மாவினை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று முட்டையையும் ஒரு கிண்ணத்தில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக உருட்டி டோநட் மாதிரி செய்துகொள்ள வேண்டும். இந்த சிக்கன் டோநட்களை முட்டைக் கலவையில் போட்டு எடுத்து, மைதா மாவில் தோய்த்து, பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயாராக உள்ள சிக்கன் டோநட்களை பொன்நிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சிக்கன் டோநட் தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்