Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா உக்ரைன் போர் - பின்வாங்கும் புடின்

ரஷ்யா உக்ரைன் போர் - பின்வாங்கும் புடின்

25 மார்கழி 2023 திங்கள் 13:58 | பார்வைகள் : 2988


கடந்த ஆண்டு ரஷ்யா தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷியா ஏற்படுத்தி உள்ள நிலையில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். 

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன.

என்னதான் உக்ரைன் மீது உக்கிர தாக்குதலை ரஷ்யா  மேற்கொண்டாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை.

உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை.

இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன. 

 உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக ரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் புதின் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்  போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்