பிரான்சில் இருந்து மும்பைக்கு 301 அகதிகளுடன் புறப்பட்டது விமானம்!
25 மார்கழி 2023 திங்கள் 14:03 | பார்வைகள் : 20284
Vatry (Marne) நகர விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய அகதிகளுடன் கூடிய விமானம் இன்று காலை திருப்பி அனுப்பப்பட்டது.
இந்தியாவின் மும்பை நகர் நோக்கி குறித்த விமானம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டது. 303 அகதிகளுடன் வியாழக்கிழமை மாலை வந்திறங்கிய குறித்த விமானத்தில் ஆட்கடத்தில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, குறித்த விமாத்தில் வந்த அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்க, மீதமான 301 அகதிகள் இன்று மீண்டும் திருப்பி அனுப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் 1984 மற்றும் 2000 ஆண்டுகளில் பிறன்வர்கள் என அறிய முடிகிறது. அவர்கள் இருவரும் இந்த ஆட்கடத்தில் பணியில் முக்கிய புள்ளியாக செயற்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை டுபாயில் இருந்து புறப்பட்ட குறித்த Airbus A340 விமானம் Nicaragua நாட்டின் தலைநகர் Managua நோக்கி பயணித்திருந்தது. இடையில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக Vatry (Marne) விமான நிலையத்தில் தரையிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan