Paristamil Navigation Paristamil advert login

புது வகை கொரோனா: தடுப்பூசி அவசியமா?: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

புது வகை கொரோனா: தடுப்பூசி அவசியமா?: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

25 மார்கழி 2023 திங்கள் 15:23 | பார்வைகள் : 2088


உலகம் முழுவதும் பரவி வரும் ஜெ.என்.,1 என்ற புதிய வகை கொரோனா வைரசிற்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், 2019 இறுதியில் முதல் முதலில் தென்பட்ட கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பலமுறை உருமாறியுள்ளது. தற்போது, ஜெ.என்.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இதன் பரவல் அதிகமாக உள்ளது.


இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். 

வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜெ.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. 

குளிர்காலம் என்பதால் ஜெ.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்