குடும்பத்தினரை ஆயுத முனையில் மிரட்டியவர் கைது! - இரு காவல்துறையினர் காயம்!!
25 மார்கழி 2023 திங்கள் 16:55 | பார்வைகள் : 10625
குடும்பத்தினை துப்பாக்கி முனையில் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் இரு காவல்துறை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
Blessy (Pas-de-Calais) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue des Prés வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றினால் 38 வயதுடைய ஒருவர் தனது குடும்பத்தினை அச்சுறுத்தியுள்ளார்.
அவரை தடுக்க முற்பட்ட வேளையில், அவர் துப்பாக்கிச்சூ மேற்கொண்டுள்ளார். இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
“நிறைந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர், வீட்டுல் இருந்த அனைத்து பொருட்களையும் சேதமாக்கியுள்ளார். பின்னர் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிய அவர், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan