சிகரட் விலைகள் அதிகரிப்பை புகைப்பிடிப்பவர்கள் விரும்பினால் தடுத்து நிறுத்த முடியும். புகைப்பிடிப்பதற்கு எதிரான அமைப்பு.
26 மார்கழி 2023 செவ்வாய் 08:38 | பார்வைகள் : 4026
புகைப்பிடிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும், வேலைகளில், சிந்தனையில் வேகம் ஏற்படுவதாகவும் புகைப்பிடிப்பவர்கள் எண்ணுவது தவறான ஒரு சிந்தனை என, புகைப்பிடிப்பதற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தத்தில் Nicotine சேரும்போது இரத்த ஓட்டம் சற்று அதிகரிக்கிறது, இது புகைப்பிடிப்பர்களுக்கு புத்துணர்ச்சி போல் தோன்றலாம், ஆனால் இது ஆபத்தானது. உடல் பயிற்சியின் போது எற்படுவது இயற்கையானது, ஆரோக்கியமானது, புகைப்பிடிப்பதால் ஏற்படுவது செயற்கையானது, ஆபத்தானது. என அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் ஆண்டொன்றுக்கு எற்படும் மரணங்களில் 40% சதவீதம் புகைப்பிடிப்பதால் ஏற்படுகிறது, இங்கு 12 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கிறார்கள் இவர்கள் அதனை நிறுத்துவதின் மூலமும், அல்லது குறைப்பதன் மூலமும் கொள்ளை லாபம் ஈட்டும் சிகரட் விற்பனையின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த முடியும் எனவும் புகைப்பிடிப்பதற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் புதிய ஆண்டில் இருந்து 7 மில்லியன் பிரஞ்சு நாட்டவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடும் அமைப்பு, அதனை தாங்கள் வரவேற்பதாகவும், அவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் உதவுவதற்காக தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், 3989 எனும் தங்களின் தொலைபேசி இலக்கத்தையும் இணைத்துள்ளது.