Paristamil Navigation Paristamil advert login

யாழில் மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு: உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு

யாழில் மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு: உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு

26 மார்கழி 2023 செவ்வாய் 11:25 | பார்வைகள் : 2628


அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி டிசம்பர் 23ஆம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியை நேற்று(25) இடம்பெற்ற நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்