Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

26 மார்கழி 2023 செவ்வாய் 16:12 | பார்வைகள் : 4464


பண்டிகை காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைதுசெய்யும் பொலிஸாரின் கடமை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்களின் பெறுமதியான உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணித்தால் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சோதனைகளுக்கு ஆதரவளிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

24 மணிநேர நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்