Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோவில்  கடும் பனி....! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவில்  கடும் பனி....! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

27 மார்கழி 2023 புதன் 05:06 | பார்வைகள் : 5618


ஒன்றாரியோவில் கடுமையான பனி மூட்டம் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக பணி மூட்டம் நீடித்து வருகின்றது. 

பகல் வேளை வரையில் பனிமூட்டம் தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் திடீரென முழுமையாகவே பனி மூட்டம் நீடிக்கும் எனவும் இதனால் வீதிகளை பாரவையிட முடியாத நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் மிக அதிகமான காணப்பட்டால் வாகனங்கள் செலுத்தும் மிகுந்த நிதானம் தேவை என சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோ, ஹமில்டன், மிசிசாகா, ஒஷாவா, வோன், ரிச்மன்ட் ஹில், மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்