குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா உறுதி

27 மார்கழி 2023 புதன் 06:08 | பார்வைகள் : 6547
குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் பா.ஜ.,வின் சமூக ஊடகம் மற்றும் ஐடி விங் உறுப்பினர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது: குடியுரிமை சட்டம் அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு பா.ஜ., உறுதி பூண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மக்களை மம்தா பானர்ஜி தவறாக வழிநடத்துகிறார். வரும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்.
அடுத்த சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும். மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில், ஊடுருவல், பசு கடத்தல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3