28 வயதிலேயே 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்!
27 மார்கழி 2023 புதன் 07:40 | பார்வைகள் : 2615
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கசிகோ ரபாடா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
செஞ்சுரியனின் Super Sport Park மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மீட்க போராடினர்.
ஆனால், ககிசோ ரபாடா (Kagiso Rabada) தனது மிரட்டலான பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் (31) மற்றும் கோலி (38) இருவரையும் வெளியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து அவரது துல்லியமான பந்துவீச்சில் அஷ்வின் (8), ஷர்துல் தாக்கூர் (24) ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.
எனிமும் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரைசதம் விளாசினார்.
இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரபாடா 5 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும், ஜென்சென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கே.எல்.ராகுல் 70 ஓட்டங்களுடனும், சிராஜ் ஓட்டங்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் காகிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
இதுவரை 6 தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், 28 வயதாகும் ரபாடா 7வது வீரராக இணைந்துள்ளார்.