அழகான பாரிஸ் வீதிகளில் அனாதைகளாக தூங்கும் குழந்தைகள். Utopia 56 அமைப்பு.

27 மார்கழி 2023 புதன் 08:15 | பார்வைகள் : 11365
குளிர், மழை, ஈரம், இவற்றிற்கும் மத்தியில் ஏறத்தாழ 1 700 குழந்தைகள் வீடற்றவர்களாக அழகிய பாரிஸ் வீதிகளில் வாழ்கிறார்கள், இவர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களோ, குறைந்தது இரவில் சூடான இடத்தில் தூங்கும் மையங்களோ, இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது என 'Utopia 56' எனும் சமூகநல அமைப்பு தெரிவித்துள்ளது.
பல நாட்களாக இரவுகளில் இவ்வாறு வீதியில் வாழும் வீடற்றவர்களை சந்தித்து சேகரித்த தகவலின்படி, இவர்கள் யாரும் வீதிகளில் வாழ விரும்பும் 'Gitan' கள் இல்லை, இவர்களில் பெரும்பாலானோர் அகதிகளாக பிரான்ஸ் நாட்டிற்குள் வந்தவர்கள், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குழந்தைகள். எனவும் 'Utopia 56' அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெருபாலான குழந்தைகள் வீதிகளில்இரவைக் கழித்துவிட்டு பகலில் பாடசாலை செல்கிறார்கள், பசியோடு படிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ள அமைப்பு இவர்களுக்கு சரியான ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவர்களில் பலர் வரும் ஒலிம்பிக் கொண்டாட்டங்களுக்காக அவசர அவசரமாக பரிசை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். அவர்களுக்கான கல்வி உட்பட எந்தவிதமான உத்திரவாதமும் வழங்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1