Paristamil Navigation Paristamil advert login

'Voitures électriques' மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களின் அரச மானியத்தை குறைக்க அரசு முடிவு.

'Voitures électriques' மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களின் அரச மானியத்தை குறைக்க அரசு முடிவு.

27 மார்கழி 2023 புதன் 08:18 | பார்வைகள் : 4185


சுற்றுச்சூழலை மாசடையச் செய்யும் எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பாவனையை குறைத்து, மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களின் பாவனையை அதிகரிக செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசு கடந்த காலங்களில் 7 000€  யூரோக்கள் வரை அரச மானியம் வழங்கி வந்தது, இதன் தொகையைக் குறைக்க அரசு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் மின்சார சக்தியில் இயங்கும் புதிய வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் எனவும், 'occasion' பாவனையில் இருக்கும் மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை வாங்கும் போதும் 1 000€ யூரோக்கள் மட்டுமே மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரான்ஸ் நாட்டில் வாழும் பணக்காரர்கள் குறித்த வாகனங்களை வாங்கும் போது 4 000€ யூரோக்களில் இருந்து 5 000€ யூரோக்கள் மட்டுமே அரச மானியம் வழங்கப்படும் எனவும், ஆனால் வருமானம் குறைந்தவர்கள் மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை வாங்கும் போது 7 000€ யூரோக்கள் வரை அரச மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக பிரான்ஸ் அரசு 1.2 பில்லியன் யூரோக்களை அரச நிதியாக ஒதுக்கியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்