Paristamil Navigation Paristamil advert login

மனிதர்களிடையே  பரவும் மான் ஜாம்பி நோய் -  விஞ்ஞானிகள் எச்சரிக்கை...!

மனிதர்களிடையே  பரவும் மான் ஜாம்பி நோய் -  விஞ்ஞானிகள் எச்சரிக்கை...!

27 மார்கழி 2023 புதன் 11:58 | பார்வைகள் : 2640


வேஸ்டிங் நோய் கடந்த மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள வனவிலங்குகளிடையே பரவும் நாள்பட்ட வேஸ்டிங் நோய் குறித்து மனிதர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வயோமிங்கில் உள்ள காட்டுமான் மற்றும் மூஸின் 800 மாதிரிகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயின் அறிகுறியாக இருப்பது, விலங்குகள் சோர்வாகவும், மந்தநிலையிலும் இருப்பதே ஆகும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயானது மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இதுவரை 31 மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விலங்குகளின் மலம், மண் அல்லது செடிகள் போன்ற இடங்களில் தொற்றி இருக்கும் துகள்கள் மூலமும் பரவுவதாக தெரியவந்துள்ளது.  

இது மனிதர்களுக்கு ஏற்பட்டால் உடல் மெலிந்து நாள்பட்ட நோயால் அவதியுற்று இறுதியில் உயிரிழந்துவிடுவார்கள் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நோயால் இன்று வரையில் எந்தவொரு மனிதரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்