இலங்கையில் தற்போது பரவி வரும் வைரஸ் - சுகாதார பிரிவு எச்சரிக்கை
27 மார்கழி 2023 புதன் 13:56 | பார்வைகள் : 2217
தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.
அத்துடன் அவ்வாறான வைரஸ் தொற்றுகள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசத்தை அணியுமாறும் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.