Paristamil Navigation Paristamil advert login

தளபதி 68 படத்தில் இணையும் பாகுபலி பட நடிகை!

தளபதி 68 படத்தில் இணையும் பாகுபலி பட நடிகை!

27 மார்கழி 2023 புதன் 15:13 | பார்வைகள் : 34973


தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 68-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு தேவா, பிரஷாந்த், லைலா, சினேகா, மாளவிகா சர்மா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் சகோதரரும், ஆஸ்தான இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் துவங்க உள்ளது. அங்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விஜய் 19 வயது இளைஞராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தளபதி 68 படம் குறித்த முக்கிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் பாகுபலி பட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் நியூ இயர் அன்று, தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வந்தாலும், தற்போது வரை தயாரிப்பு நிறுவனமாக AGS நிறுவனம் சார்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்